1 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக. 2 லோகம் தன் சந்தோஷமான நரக வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான், இயேசுவே, உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும், அப்போ மோசங்கள் கலையும். 3 எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் எனக்கநுகூலம் செய்யும் என்பதே என் ஆறுதல்; ஏனெனில் நீர் எனக்கு பதிலாய் மரித்தது என்னை எந்த அவதிக்கும் நீங்கலாக்கி விடுவிக்கும். 4 நீர் மரித்ததால் ஓர்க்காலும் சாவை ருசிபாரேனே; இதை முழு மனதாலும் நான் நம்பட்டும், இயேசுவே; உமது அவஸ்தையும் சாவின் வேதனைகளும் நான் பிழைக்கிறதற்காக எனக்குப் பலிப்பதாக. 5 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; முடிவில் விசேஷமாய் என்னை மீட்ட மீட்பராய் என்னை ஆதரித்தன்பாக அங்கே சேர்த்துக்கொள்வீராக.